×

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி… திடீரென நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

சென்னை : தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறையில் பணி நியமனம் செய்த விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர், நண்பர்களுக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். .சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி அறையிலும் அமலாக்கத் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இல்லத்தில் சோதனை நிறைவடைந்த நிலையில், அதிகாலை செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. நெஞ்சுவலியால் செந்தில் பாலாஜி கதறி அழுத நிலையில் அவர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகளால் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து அமைச்சர் செந்தில் பாலாஜியை காண அமைச்சர்கள் உதயநிதி, சேகர் பாபு ,மா.சுப்பிரமணியம் உள்ளிட்டோர் மருத்துவமனைக்கு சென்றனர்.

The post அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி… திடீரென நெஞ்சுவலி காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthil Balaji ,Enforcement department ,Chennai ,Tamil Nadu ,Senthilpolaji ,Enforcement ,
× RELATED செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கக்...