×

கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு வேலை வேண்டி தஞ்சாவூர் கலெக்டரிடம் திருநங்கை மனு

தஞ்சாவூர், ஜூன் 14: வேலைவாய்ப்பு வேண்டி பாபநாசம் மணலூர் இலுப்பக்கோரை மெயின் ரோடு ஸ்டாலின் நகரை சேர்ந்த திருநங்கை நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
வேலைவாய்ப்பு வேண்டி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா மணலூர் இலுப்பகோரை மெயின் ரோடு ஸ்டாலின் நகரை சேர்ந்தவர் சுப. திருநங்கையான நான் வேலைவாய்ப்பு வேண்டி மாவட்ட கலெக்டரிடமும், முதலமைச்சரின் தனிப்பிரிவிருக்கும் பலமுறை மனு அனுப்பியும் இந்நாள் வரை எந்த ஒரு பதிலும் வரவில்லை. திருநங்கைகள் ஆகிய நாங்கள் சாதிக்க வேண்டும் என்றால் எங்களுக்கு அரசு சார்பில் ஏதாவது உதவி செய்தால் மட்டுமே முன்னேற முடியும். எனவே தயவு கூர்ந்து என்னுடைய மனதை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

The post கும்பகோணம் கோர்ட் தீர்ப்பு வேலை வேண்டி தஞ்சாவூர் கலெக்டரிடம் திருநங்கை மனு appeared first on Dinakaran.

Tags : Thanjavur ,Kumbakonam Court ,Babanasam Manalur Ilipakkar ,Road Stalin ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கல்லணை கால்வாயில் தண்ணீர்...