×

ஆடு வாங்கி தந்தவருக்கு அடி

சிவகாசி, ஜூன் 14: சிவகாசி அருகே திருத்தங்கல் இந்திரா நகரை சேர்ந்தவர் சேது(72). ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு ஆடுகள் வாங்கிக் கொடுத்த வகையில், செங்கமல நாச்சியார்புரத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் சேதுவிற்கு ரூ.55 ஆயிரம் தரவேண்டியதாக கூறப்படுகிறது. அவர் பணம் தராததால் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்பிறகு ரூ.20 ஆயிரம் மட்டும் சுரேஷ் கொடுத்தார். மீதி பணத்தை சேது, அவரது மனைவி காளீஸ்வரி(65) கேட்டுள்ளனர். அதற்கு சுரேஷ் இருவரையும் தகாத வார்த்தை பேசி கம்பு கல்லால் அடித்து கொலை மிரட்டல் விடுத்தார். இது குறித்து திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.

The post ஆடு வாங்கி தந்தவருக்கு அடி appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Sethu ,Editangal Indira ,
× RELATED சிவகாசி அருகே சரவெடி பதுக்கிய குடோனுக்கு சீல்: அதிகாரிகள் நடவடிக்கை