×

மின்வாரிய பணியாளர் சட்டையில் தீப்பிடித்தது

 

ஆண்டிபட்டி, ஜூன் 14: ஆண்டிபட்டி அருகே தொட்டப்ப நாயக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் பாண்டி(45). இவர் தமிழக மின்சார வாரியம் ஆண்டிபட்டியில் தற்காலிக பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று சக்கம்பட்டி, திருவள்ளுவர் காலனி அருகே மின்கம்பத்தில் ஏறி மின் வயர்களை சரி செய்யும் பணியில் இருந்தார். அவரது தலைக்கு மேலே சென்ற உயர் அழுத்த மின் கம்பி எதிர்பாராத அவர் மீது உரசியதில் சட்டையில் தீப்பிடித்தது. பதட்டத்தில் இருந்த அவரை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் கெட்டியான பெட்ஷீட்டை பிடித்துக் கொண்டு அதில் குதிக்கச் செய்து மீட்டனர்.

The post மின்வாரிய பணியாளர் சட்டையில் தீப்பிடித்தது appeared first on Dinakaran.

Tags : Andipatti ,Pandi ,Thotappa Nayakkanur ,Tamil Nadu Electricity Board ,Power Board ,Dinakaran ,
× RELATED ஆண்டிபட்டி அருகே சாலை சீரமைப்பு பணியின் தரம் ஆய்வு