×

பாகம்பிரியாள் கோயிலில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல்

 

திருவாடானை, ஜூன் 14: திருவெற்றியூர் பாகம் பிரியாள் கோயிலில் பக்தர்கள் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைத்து குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பிரசித்தி பெற்ற பாகம்பிரியாள் அம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய்,வெள்ளிக் கிழமைகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளியூர் பக்தர்கள் வந்து இரவு தங்கி சாமி கும்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த கோயிலை பொறுத்தமட்டில் இரவு தங்கி சாமி கும்பிடுவது புண்ணியம் என கருதி தங்கி சாமி தரிசனம் செய்கின்றனர். ஆனால் இங்கு வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வில்லை. குறிப்பாக குடிதண்ணீர் சரியான முறையில் வழங்கப்பட வில்லை. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் இக்கோயிலில் கோயில் அலுவலக ம்அருகே குடிநீர் சிறிய அளவில் வழங்கப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் இக்கோவிலுக்கு நான்கு வீதிகளிலும் குடிநீர் ேடங்க் அமைத்து அதன் மூலம் குடிநீர் குழாய் நிறுவி குடிதண்ணீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

திருவெற்றியூர் கிராம பொதுமக்கள் கூறுகையில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரும் இந்த கோயிலில் கோயில் கிணற்றிலிருந்து சிறிய டேங்குகளில் தண்ணீரை நிரப்பி ஒரு இடத்தில் மட்டும் வைத்து தண்ணீர் வழங்கப்படுகிறது. இது போதுமானதாக இல்லை. பக்தர்கள் பல இடங்களில் வீடுகளில் தண்ணீர் கேட்டு கெஞ்சுவது பரிதாபமாக உள்ளது. எனவே கோயில் முன்பாக ஆழ்துளை கிணறு அமைத்து நான்கு வீதிகளிலும் குடிநீர் டேங்க் அமைத்து அதன் மூலம் குடிதண்ணீர் வழங்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

The post பாகம்பிரியாள் கோயிலில் குடிநீர் தொட்டி அமைக்க வேண்டும்: பக்தர்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Bagambriyal Temple ,Thiruvadanai ,Priyal ,
× RELATED பாகம்பிரியாள் கோயிலில் உண்டியல் வசூல் ரூ.34 லட்சம்