×

வேடசந்தூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி

வேடசந்தூர், ஜூன் 14: வேடசந்தூர் ஆத்துமேட்டில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கையெழுத்து இயக்கம் நடந்தது. குழந்தைகள் திருமணம் தடுத்தல் ஒருங்கிணைப்பாளர் கோகிலா வரவேற்றார். டிஎஸ்பி துர்காதேவி பேரணியை துவக்கி வைத்தார். தொழிலாளர் துறை உதவி ஆணையர் சிவசிந்து முதல் கையெழுத்தை துவங்கி வைத்தார்.

இதில் அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அமுதகலா, எஸ்ஐ பாண்டியன், குடகனாறு பாதுகாப்பு சங்க தலைவர் ராமசாமி, அனைத்து வர்த்தக சங்க தலைவர் சுகுமார்,பெண்கள் பாதுகாப்பு குழு உறுப்பினர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேரணியில் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு, இளம் திருமணம் தடுத்தல், குழந்தைகளின் உடல்நிலை, மனநிலை, கல்வி, சுகாதாரம், பாதுகாப்பு என குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கும் நோக்கத்துடன் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஒருங்கிணைப்பாளர் மணிமேகலை நன்றி கூறினார்.

The post வேடசந்தூரில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பேரணி appeared first on Dinakaran.

Tags : Anti-Child Labor Day ,Vedsandur ,Vedasandur ,Dinakaran ,
× RELATED கிணற்றில் விழுந்த மயில் மீட்பு