×

ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 70ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை: பிரதமர் மோடி வழங்கினார்

புதுடெல்லி: ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திரமோடி 70 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார். ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. வீடியோ கான்பரன்ஸ் மூலமாக பிரதமர் மோடி இதில் கலந்து கொண்டார். தொடர்ந்து பணிநியமன ஆணைகளை அவர் வழங்கினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, அரசு பணி நியமன செயல்முறை முன்பெல்லாம் சுமார் ஒன்றரை ஆண்டுகள் நீடிக்கும். ஆனால் தற்போது பணி நியமனம் வெளிப்படையாக சில மாதங்களில் முடிந்துவிடுகின்றது.

அனைத்து அமைப்புகளிலும் வாரிசு கட்சிகள் எப்படி உறவினரையும் ஊழலையும் ஊக்குவித்தன என்பதை கடந்த காலங்களில் நாம் பார்த்திருக்கிறோம். அரசு பணி என்று வரும்போது சொந்தபந்தங்களையும் ஊழலையும் இந்த வாரிசு கட்சிகள் ஊக்குவித்தன. இதன் மூலமாக கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு துரோகம் இழைத்துள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை காட்டிலும் இந்தியா இப்போது மிகவும் நிலையான, பாதுகாப்பான மற்றும் வலுவான நாடாக மாறியுள்ளது.

உறுதிதன்மை இந்திய அரசின் அடையாளமாக மாறியுள்ளது. கடந்த காலங்களில் பொருளாதாரத்தில் இதுபோன்ற நம்பிக்கை இருந்தது கிடையாது. ஒருபுறம் தொற்று காரணமாக மந்த நிலை நீடித்தது. மற்றொருபுறம் உக்ரைன் போர் காரணமாக விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டது. இந்த அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு தனது பொருளாதாரத்தை இந்தியா புதிய உயரத்திற்கு கொண்டு செல்கிறது” என்றார்.

The post ரோஜ்கர் மேளா திட்டத்தின் கீழ் 70ஆயிரம் பேருக்கு பணிநியமன ஆணை: பிரதமர் மோடி வழங்கினார் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,New Delhi ,Narendra Modi ,Rojkar ,Modi ,Dinakaran ,
× RELATED பாஜவின் கோட்டைகளிலும் மோடிக்கு ஏன் பயம்?