×

புனித அந்தோனியார் தேவாலயத்தின் 73ம் ஆண்டு பெருவிழா

 

ஆவடி: ஆவடியில் புனித அந்தோனியார் தேவாலயத்தில் 73 ஆம் ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆவடியில் உள்ள புனித அந்தோனியர் தேவாலயம் மிகவும் பழமையானது. இதில் ஆண்டுதோறும் பெருவிழா கொண்டாடுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு 73வது பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐந்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முதல்நாள் திருக்கொடி பவனி மற்றும் கொடி ஏற்றம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் தமிழ் திருப்பலி நடைபெற்றது. அடுத்தடுத்த நாட்களில் நவநாள் திருப்பலியும், நற்கருணை பெருவிழா, நற்கருணை பவனி நடைபெறவுள்ளதாக பாதர் லாரன்ஸ் ராஜ் தெரிவித்துள்ளார். விழாவின் முக்கிய நிகழ்வாக 17ம் தேதி ஆடம்பர திருத்தேர் பவனி மற்றும் திருவிழா திருப்பலியும் நடைபெறவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு ஆலயம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏறக்குறைய 20 ஆயிரம் பக்தர்கள் வரை இந்த விழாவில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இதற்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாக விழா குழுவினர் தெரிவித்துள்ளனர்.

The post புனித அந்தோனியார் தேவாலயத்தின் 73ம் ஆண்டு பெருவிழா appeared first on Dinakaran.

Tags : St. ,Anthony's Church ,Aavadi ,St. Anthony's Church ,Avadi ,
× RELATED நான் உயிருடன் இருக்கும் வரை...