×

கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜெயஸ்ரீ நகரில் சுடுகாடு கட்டும் பணி நிறுத்தம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிபூண்டி பேரூராட்சி பகுதியில் உள்ள ஜெயஸ்ரீ நகரில் மிகப்பழமை வாய்ந்த சுடுகாடு உள்ளது. இந்த சுடுகாட்டுக்கு தபால் தெரு, மேட்டு தெரு, காட்டுக்கொள்ளை தெரு, கும்மிடிப்பூண்டி ஜிஎன்டி சாலை ஆகிய பகுதிகளில் சேர்ந்த ஒரு சமூகத்தினர் 100 ஆண்டுக்கு மேலாக பயன்படுத்தி வருகின்றனர். அத்தோடு கும்மிடிப்பூண்டி பேரூராட்சியில் பல தெருக்களில் அந்தந்த சமூகத்திற்கு தனி தனியாக சுடுகாடு உள்ள நிலையில், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி சார்பாக எரிவாயு தகன மேடை அமைக்க கடந்த ஆண்டு தமிழக அரசு மூலம் ரூ.1 கோடியே 30 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இதற்காக பேரூராட்சி செயல் அலுவலர் யமுனா, தலைவர் சகிலா அறிவழகன், கவுன்சிலர்கள் அனைவரும் ஒன்று கூடி, பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்தாமல், சுடுகாடு அமைக்கும் பணிக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி சில மாதங்களுக்கு முன்பு அதற்கான பணியும் ஜெயஸ்ரீ நகரில் உள்ள திடக்கழிவு மேலாண்மை இடத்தில் துவங்கப்பட்ட நிலையில், அந்த இடம் கலம் பொறம்போக்கு என்பதால் பணி நிறுத்தப்பட்டது. அதன் பின்பு அருகே ஒட்டியுள்ள ஒரே சமூகத்தினர் பயன்படுத்தி வந்த மிக பழமை வாய்ந்த சுடுகாட்டை எரிவாயு தகனமேடை அமைக்க வேண்டும் என முடிவு செய்தனர். இதையறிந்த ஊர் பொதுமக்கள், பேரூராட்சி அலுவலகம், எம்எல்ஏ, திருவள்ளூர் கலெக்டர் என பல்வேறு அரசு அலுவலகங்களில், ஜெயஸ்ரீ நகரில் சுடுகாடு அமைக்கும் பணியை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி மனு கொடுத்தனர்.

இது சம்பந்தமாக பொன்னேரி சார கலெக்டர் ஐஸ்வர்யா தலைமையில், பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் மேற்கண்ட எரிவாயு தகனம் மேடையை அனைவரும் பயன்படுத்தும் சுடுகாட்டில் அமைக்க வேண்டுமென பொதுமக்கள் சார்பாக எடுத்துரைக்கப்பட்டது. இந்த பணியை நிறுத்தக்கோரி, ஏற்கனவே 5 முறை ஆர்ப்பாட்டம் செய்தும் பணி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து இக்கிராமமக்கள் இப்பணிக்கு எதிர்த்து தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. பின்னர் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் தாசில்தார் ஆகியோர் முன்னிலையில் பொக்லைன் இயந்திரங்களுடன் பணி துவக்கப்பட்டது.

இதையறிந்த தபால் தெரு மேட்டுத்தெரு பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சுடுகாட்டு நுழைவாயிலில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாசில்தார் பிரீத்தி மேற்கண்ட பணி நடைபெறும் என அதிரடியாக கூறிவிட்டு சென்றனர். பின்பு பொதுமக்கள் அங்கிருந்து வெளியேறி தபால் தெரு, மேட்டு தெரு குடியிருப்புகளில் கருப்பு கட்டி எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் தபால் தெரு பெருமாள் கோயில் எதிரே டிஎஸ்பி கிரியாசக்தி, இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன், போலீசார் 50க்கும் மேற்பட்ட பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

ஊர் பொதுமக்கள் பெண்கள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் ஒன்றுகூடி மேற்கண்ட எரிவாயு தகன மேடை அமைக்கும் பணியை நிறுத்தி, வேறு இடத்திற்கு மாற்றக்கோரி அனைத்து கட்சி கொடி மற்றும் கருப்பு கொடி ஏந்தி பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தியபோது, தடுப்பையும் மீறி ஜிஎன்டி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையறிந்த போலீசார், ஊர் பொதுமக்களை பிடித்து வாகனங்களை ஏற முயற்சித்தனர். ஆனால் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி மேற்கண்ட ஜிஎம்டி சாலை வழியாக போலீசார் வாக்குவாதங்களுடன் ஓடி ஜெயஸ்ரீ நகரில் உள்ள சுடுகாட்டில் கருப்பு கொடிகளுடன் தோண்டப்பட்ட பழங்களை கைகளில் மன்களை வீசி முற்றுகை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையறிந்த சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார், செயல் அலுவலர், போலீசார், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையில் மேற்கண்ட பணியை நிறுத்த வேண்டுமென எடுத்துரைத்தினர். இது சம்பந்தமாக அதிகாரிகள் திருவள்ளூர் மாவட்ட சப் கலெக்டருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நிலவரத்தை கூறி பொதுமக்களை சமாதானப்படுத்தினர். அதைத்தொடர்ந்து எரிவாய்வு தகன மேடை அமைப்பதற்கான கட்டுமான பொருட்களை உடனடியாக அகற்றினால் மட்டுமே நாங்கள் இங்கிருந்து வெளியேறுவோம் என பொதுமக்கள் சார்பாக கூறப்பட்டது.

அந்த கோரிக்கையை ஏற்று மேற்கண்ட அனைத்து பொருட்களும் வெளியேற்றப்பட்டு, பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட பள்ளங்களை சமதள படுத்திய பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், மேற்கண்ட எரிவாயு தகன மேடை பணி குறித்து கலெக்டர் முன்னிலையில் கருத்து கேட்டு கூட்டம் நடைபெறும்” என தெரிவித்தனர். இச்சம்பவம் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஜெயஸ்ரீ நகரில் சுடுகாடு கட்டும் பணி நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Jayasree ,Kummidipoondi ,Jayasree Nagar ,Kummidipoondi Municipality ,Postal Street ,Dinakaran ,
× RELATED கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியத்தில்...