காத்மண்டு: நேபாள அதிபர் ராம்சந்திர பவுடேல், 78, நெஞ்சுவலி காரணமாக பன்ஸ்பாரியில் உள்ள ஷாகித் கங்காலால் தேசிய இதய மையத்தில் நேற்று காலை 11 மணியளவில் சேர்க்கப்பட்டார். அவரை பரிசோதித்த குடும்ப மருத்துவர் நீரஜ் பாம், ‘’அதிபரின் உடல்நிலை குறித்து பயப்படும் அளவிற்கு ஒன்றுமில்லை. வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்,’’ என்று தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் மூச்சு திணறல், வயிற்று வலி காரணமாக அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
The post நேபாள அதிபர் மருத்துவமனையில் அனுமதி appeared first on Dinakaran.