×

16 ந் தேதி சிறப்பு வங்கி மேளா: கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: திருள்ளூரில் சிறப்பு வங்கி மேளா நடையிருப்பதாகவும் விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமென மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கலெக்டர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டிலிருந்து கலைஞரின் அனைத்து கிராமங்களின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் கிராம பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோர் பயன்பெறும் வகையில் அனைத்து வட்டாரங்களிலும் 15 நாட்களுக்கு ஒருமுறை \”சிறப்பு வங்கி மேளா\” நடத்தப்பட்டு விண்ணப்பித்திருந்த தகுதியுள்ள விவசாயிகளுக்கும், வேளாண் சார்ந்த தொழில் முனைவோருக்கும், சுய உதவிக்குழுக்களுக்கும், கறவை மாடுகள் வாங்குவதற்கும், பட்டப்படிப்பு பயிலவும் வங்கிக் கடன் உதவிகள் உடனடியாக வழங்கப்பட்டு விவசாயிகள் பெருமளவில் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த மே மாதம் 30 ந் தேதி தேர்வு செய்யப்பட்ட 141 கலைஞர் திட்ட கிராமங்களில் முதற்கட்டமாக 14 கிராமங்களில் வங்கித்துறைகளுடன் வேளாண்மை உழவர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, கூட்டுறவுத்துறை, மாவட்ட தொழில்மையம், தாட்கோ மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளையும் இணைத்து \”சிறப்பு வங்கி மேளா\” நடத்தப்பட்டு, விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு வங்கி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, \”இரண்டாவது கட்டமாக வருகின்ற 16 ந் தேதி காக்கவாக்கம், சிறுவாடா, இலுப்பூர், பூங்குளம், கிருஷ்ணமராஜகுப்பம், கொலப்பஞ்சேரி, கச்சூர், விளாங்காடுபாக்கம், சின்னநாகப்பூடி, பெரியமுல்லைவாயல், பெரியகடம்பூர், திருவாலங்காடு, விளாப்பாக்கம் மற்றும் அரக்கம்பாக்கம் ஆகிய 14 கலைஞர் திட்ட கிராமங்களில் காலை 10 மணியளவில் சிறப்பு வங்கி மேளா நடத்த வங்கி மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

எனவே மேற்குறிப்பிட்ட கலைஞர் திட்ட கிராமங்களில் பஞ்சாயத்து அலுவலகங்களில் நடைபெறும் சிறப்பு வங்கி மேளாவில் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டு புதிய வங்கிக்கணக்கு துவங்கவும், இன்சூரன்ஸ் பதியவும் கல்விக்கடன், பயிர்க்கடன், கிசான் கிரெடிட்கார்டு கடன், சுயதொழில் கடன், வேலைவாய்ப்பு கடன், கால்நடை பராமரிப்புக்கடன், வேளாண் இயந்திரங்கள் கொள்முதல் கடன், வேளாண் உட்கட்டமைப்பு நிதிக்கடன், மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், தாட்கோ கடன், கூட்டுறவு வங்கி கடன் மற்றும் இதர வங்கிக்கடன்கள் பெறுவதற்கும், பிரதம மந்திரி நுண்ணீர் பாசனத்திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயி சான்று மற்றும் பட்டா மாறுதல் பெறுவதற்கும் தேவையான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் கிராம பொறுப்பு அலுவலர் மற்றும் வங்கிப்பொறுப்பாளரிடம் சமர்ப்பித்து கடனுதவி உடனடியாக பெற்று பயன்பெறவேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

The post 16 ந் தேதி சிறப்பு வங்கி மேளா: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Maya ,Thiruvallur ,Thirullur ,Dinakaran ,
× RELATED நடமாடும் மண், நீர் பரிசோதனை நிலையம்: வேளாண்மை இணை இயக்குனர் தகவல்