×

இந்தோனேசியா ஓபன் 2வது சுற்றில் சிந்து

ஜகார்தா: இந்தோனேசிய ஓபன் பேட்மின்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றார். முதல் சுற்றில் இந்தோனேசியாவின் கிரிகோரியா துன்ஜங் (23 வயது, 9வது ரேங்க்) உடன் நேற்று மோதிய சிந்து (27 வயது, 13வது ரேங்க்) 21-19, 21-15 என்ற நேர் செட்களில் வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார். விறுவிறுப்பான இப்போட்டி 38 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. நடப்பு சீசனில் கிரிகோரியாவுடன் 3வது முறையாக மோதிய சிந்து முதல் முறையாக வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, இந்த ஆண்டு தொடக்கத்தில் மாட்ரிட் மாஸ்டர்ஸ் பைனலிலும், மலேசியன் மாஸ்டர்ஸ் அரையிறுதியிலும் கிரிகோரியாவுக்கு எதிராக சிந்து தோல்வியைத் தழுவியிருந்தார். பிரணாய் முன்னேற்றம்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் களமிறங்கிய இந்திய வீரர் எச்.எஸ்.பிரணாய் (30வயது, 8வது ரேங்க்) 21-16, 21-14 என்ற நேர் செட்களில் ஜப்பான் வீரர் நிஷிமோடோ கென்டாவை (11வது ரேங்க்) வீழ்த்தி காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். இப்போட்டி 50 நிமிடங்களுக்கு நீடித்தது. இரட்டையர் பிரிவில் இந்தியாவின் த்ரீசா ஜாலி – காயத்ரி கோபிசந்த், எம்.ஆர்.அர்ஜூன் – துருவ் கபிலா முதல் சுற்றுடன் வெளியேறி ஏமாற்றமளித்தனர்.

The post இந்தோனேசியா ஓபன் 2வது சுற்றில் சிந்து appeared first on Dinakaran.

Tags : Sindh ,Indonesia Open ,Jakarta ,India ,P. CV Sin ,Dinakaran ,
× RELATED ஆசிய சாம்பியன்ஷிப் பேட்மின்டன்; 2வது சுற்றில் சிந்து