×

பாஜ எம்எல்ஏ ஆபீசில் நுழைந்த வாலிபர் சாலையில் தள்ளிவிட்ட உதவியாளர்: பேருந்தில் சிக்கி பலி

கோவை ஓசூர் ரோட்டில் கோவை தெற்கு தொகுதி பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் மாலை அலுவலக உதவியாளர் விஜய் பணியில் இருந்தார். அப்போது அலுவலகத்துக்குள் புகுந்த மர்மநபர் திடீரென அறை கதவை உட்பக்கமாக பூட்ட முயன்றார். இதை பார்த்து விஜய் அவரை தாக்கி வெளியே இழுத்து சென்று சாலையில் வேகமாக தள்ளிவிட்டார். இதில் அவர் காயமடைந்து, தள்ளாடியபடி எழுந்து சென்றார்.
இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் உதவியாளர் விஜய் புகார் அளித்தார். அதன்பேரில் ரேஸ்கோர்ஸ் போலீசார் சிஎஸ்ஆர் பதிவு செய்து, பாஜ எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த 4 மணி நேரத்தில் பாஜ அலுவலகத்தில் இருந்து 2 கிமீ தொலைவில் உள்ள அவிநாசி ரோட்டில் மர்மநபர் ஒருவர் வாகனம் மோதி பலியானார். விசாரணையில், அவர் தான் பாஜ அலுவலகத்தில் இருந்து தள்ளிவிட்டப்பட்டவர் என்பது தெரியவந்தது. அப்பகுதி சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் அவர் அரசு பஸ்சில் சிக்கி இறந்தது பதிவாகியிருந்தது. இதுகுறித்து எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறுகையில், ‘என்னுடைய எம்எல்ஏ அலுவலகத்துக்குள் நுழைந்த நபர், அறையை உட்புறமாக பூட்ட முயன்றுள்ளார். அந்த நபரை அலுவலகத்தில் இருந்த உதவியாளர் வெளியேற்றி இருக்கிறார். அவரது நோக்கம் என்ன என்பது குறித்து தெரியவில்லை. அந்த நபர் யார்? என்பது குறித்தும், என்ன நோக்கத்திற்காக வந்திருக்கிறார்? என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும்’ என்றார்.

The post பாஜ எம்எல்ஏ ஆபீசில் நுழைந்த வாலிபர் சாலையில் தள்ளிவிட்ட உதவியாளர்: பேருந்தில் சிக்கி பலி appeared first on Dinakaran.

Tags : Aide ,Baja MLA ,Coimbatore South Constituency ,Baja ,MLA ,Vanathi Srinivasan ,Hosur Road, Coimbatore ,
× RELATED 25 ஆண்டுகள் சிறை தண்டனை சிறுமி பலாத்கார...