×

11ம் வகுப்பு தேர்வில் பல பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணை தேர்வு நடத்த அனுமதி உள்ளதா, இல்லையா? ஐகோர்ட் உத்தரவு

சென்னை: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதாகவும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை எனவும் கூறி ஏராளமான மாணவர்கள் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி, மூன்று வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து கேந்திரிய வித்யாலயா சங்கதன் தரப்பிலான மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா அமர்வு முன் வந்தது. இதில் ‘‘11ம் வகுப்புக்கு துணைத் தேர்வு நடத்தப்படுகிறதா என்பது குறித்தும், ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்கள் மறு தேர்வு எழுத அனுமதி இல்லையா என்பது குறித்தும் விளக்கமளிக்கும்படி நீபதிகள் ஒன்றிய இடைநிலை கல்வி வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.

The post 11ம் வகுப்பு தேர்வில் பல பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு துணை தேர்வு நடத்த அனுமதி உள்ளதா, இல்லையா? ஐகோர்ட் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kendriya ,Vidyalaya ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தலில் அமோக வெற்றி அண்ணா...