×

ஜி-20 மாநாட்டை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை: மீறினால் நடவடிக்கை பாயும் என போலீஸ் எச்சரிக்கை

சென்னை: மகாபலிபுரத்தில் ஜி-20 மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் வரும் 17ம் தேதி வரை டிரோன்கள் பறக்க தடை விதித்து மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னை அடுத்த மகாபலிபுரத்தில் ஜி-20 பெண்கள் மாநாடு வரும் 15ம் தேதி,16ம் தேதி ஆகிய 2 நாட்கள் மாநாடு நடைபெறுகிறது. இதனால் வெளிநாடுகளில் இருந்து முக்கிய பிரதிநிதிகள் இந்த மாநாட்டில் கலந்து கொள்கிறார்கள். எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் வரும் 17ம் தேதி வரை, அதாவது 4 நாட்கள் சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வெளிநாட்டு பிரதிநிதிகள் வருகை மற்றும் தங்கும் இடங்கள், முக்கிய பிரதிநிதிகள் பயணம் செய்யும் வழித்தடங்கள் சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு அந்த பகுதிகள் மற்றும் வழித்தடங்களில் இன்று முதல் 17ம் தேதி வரையில் டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்படுகிறது. இந்த தடையை மீறி யாரேனும் டிரோன் மற்றும் இதர வான் வழி சாதனங்களை பயன்படுத்தினால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையாக பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

The post ஜி-20 மாநாட்டை முன்னிட்டு சென்னையில் இன்று முதல் 4 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை: மீறினால் நடவடிக்கை பாயும் என போலீஸ் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chennai ,G-20 ,G-20 conference ,Mahabalipuram ,Dinakaran ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...