×
Saravana Stores

பழநி மலைக்கோயிலில் குரங்குகள் கோஷ்டி சண்டை: இணையத்தில் வைரலாகும் வீடியோ

பழநி: பழநி மலைக்கோயிலில் இருதரப்பாக பிரிந்து குரங்குகள் சண்டையிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் பக்தர்கள் தரும் உணவுகளை உட்கொள்ள குரங்குகள் அதிகளவில் வலம் வருகின்றன. இந்த குரங்குகள் சில சமயம் பக்தர்களிடம் உள்ள பிரசாத பைகள், பர்ஸ்கள் மற்றும் செல்போன் போன்றவற்றையும் பறித்துச் செல்கின்றன. இதனால் குரங்குகள் கூண்டு வைத்து பிடிக்கப்பட்டு, வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடப்பட்டன.

ஆனாலும், பழநி கோயிலில் குரங்குகளின் கூட்டம் குறையவில்லை. இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு மலைக்கோயிலின் ஒரு பகுதியில் திரண்ட 50க்கும் மேற்பட்ட குரங்குகள், இரு தரப்பாக பிரிந்து நின்று கூச்சலிட்டபடி, ஒன்றையொன்று தாக்கிக் கொண்டன. இந்த காட்சியை பக்தர் ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். இந்த செல்போன் பதிவு, தற்போது வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோயில் நிர்வாகம், வனத்துறை மூலம் பழநி மலைக்கோயிலில் திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பழநி மலைக்கோயிலில் குரங்குகள் கோஷ்டி சண்டை: இணையத்தில் வைரலாகும் வீடியோ appeared first on Dinakaran.

Tags : Blahini ,Palani ,Palani mountains ,Tamil Nadu ,
× RELATED பழனி முருகன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு..!!