×

கூட்டணி கட்சித் தலைவர்களை நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் பாடம் எடுக்கவேண்டாம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி

சென்னை: கூட்டணி தர்மத்தை நன்கு உணர்ந்தவன் நான் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அண்ணாமலை, தமிழகத்தின் எதிர்காலம் குறித்த எனது கனவு, கொள்கைகளை அடமானம் வைக்க விருப்பமில்லை. கூட்டணி கட்சித்தலைவர்களை நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் பாடம் எடுக்கவேண்டாம். எனது மனசாட்சிப்படி தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்ய வந்துள்ளேன். உண்மைக்குப் புறம்பாக பேசியதாக சுட்டிக் காட்டினால் அதை ஏற்பதில் தயக்கம் இல்லை. கூட்டணி கட்சி விரும்புவதையெல்லாம் நாங்களும் கூற வேண்டும் என எதிர்பார்ப்பது பொருத்தமற்றது. பிரதமர் மோடியின் அரசியல் நடவடிக்கைகளால் ஈர்க்கப்பட்டு அரசியலுக்கு வந்தவன் நான் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post கூட்டணி கட்சித் தலைவர்களை நடத்தும் விதம் குறித்து எனக்கு யாரும் பாடம் எடுக்கவேண்டாம்: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,BJP ,Annamalai ,Chennai ,Tamil ,Nadu ,president ,dharma ,Dinakaran ,
× RELATED என்னால் மன்னிப்பு கேட்க முடியாது :...