×

2022-23ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை: 2022-23ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 மண்டலங்களில் தகுதியான மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் நகர்ப்புறங்களில் உள்ள சுயஉதவிக் குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கான அறிவிப்பை அரசாணை (நிலை) எண்.133, நாள்: 15.11.2021ன்படி வெளியிட்டார்.

மணிமேகலை விருது தேர்வுக்கான (தகுதி அடிப்படையிலான 4 தகுதிகள் மற்றும் 6 மதிப்பீட்டு காரணிகள் குறித்து) அரசாணை (நிலை) எண்.72 வாயிலாக நாள்: 24.11.2006ன்படி மாநில மற்றும் மாவட்ட அளவிலான நகர்ப்புறங்களில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் (SHG) பகுதி அளவிலான கூட்டமைப்பு (ALF) மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு (CLF) ஆகியவற்றை விருதிற்காக தேர்வு செய்யும் வழிகாட்டு நெறிமுறைகள் இவ்வரசாணையில் வழங்கப்பட்டுள்ளது.

எனவே, மேற்காணும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், 2022-23ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு சென்னை மாவட்டத்தின் நகர்ப்புற பகுதியில் உள்ள 15 மண்டலங்களின் தகுதியான மகளிர் சுயஉதவிக் குழுக்கள் (SHG), பகுதி அளவிலான கூட்டமைப்பு (ALF) மற்றும் நகர அளவிலான கூட்டமைப்பு (CLF) ஆகியவற்றின் விண்ணப்பங்கள் 25.06.2023ஆம் தேதிக்குள் சமுதாய அமைப்பாளர்கள் மூலம் சென்னை நகர இயக்க மேலாண்மை அலகு, எண்.100, அண்ணா சாலை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கு அனுப்பிட வேண்டும் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

The post 2022-23ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கான விண்ணப்பங்கள் வரவேற்பு! appeared first on Dinakaran.

Tags : Manimegalai ,Chennai ,Chennai Corporation ,Dinakaran ,
× RELATED முட்டி தள்ளும் மாடுகள் அட்டகாசத்தை...