×

ஜேக் டோர்சியின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்: காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்

டெல்லி: விவசாயிகள் போராட்டம் இருட்டடிப்பு செய்யப்பட்டதாக டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ கூறிய குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும் என்று காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருக்கின்றன. விவசாயிகளின் போராட்டத்தின் போது டிவிட்டர் நிறுவனத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக அந்நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ ஜேக் டோர்சி கூறிய குற்றச்சாட்டு விவாத பொருளாகி உள்ளது.

இது குறித்து பேசி இருக்கும் முன்னாள் ஒன்றிய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபில்; நாட்டின் ஜனநாயகத்தை மோடி தலைமையிலான அரசு கொலை செய்ய முயற்சிப்பது தெரியவந்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளை அச்சுறுத்தியது உண்மை தான் என்றும் ஜேக் டோர்சி பொய் சொல்லவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

9 ஆண்டு கால ஒன்றிய பாஜக ஆட்சியில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதற்கு ஜேக் டோர்சியின் குற்றச்சாட்டு மற்றொரு எடுத்துக்காட்டு என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மணீஷ் திவாரி தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ கூறிய தகவல் உண்மை தான் என்றும் தங்களின் போராட்டத்தின் போது சமூக வலைத்தளங்களில் போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்று விவசாய சங்கத்தலைவர் ராகேஷ் தியாகத் தெரிவித்துள்ளார்.

The post ஜேக் டோர்சியின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்: காங்கிரஸ், சிவசேனா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,Jack Dorsey ,Congress ,Shiv Sena ,Delhi ,Twitter ,
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து...