×

திருவாரூரில் 20ம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு விழா: பீகார் முதல்வர், துணை முதல்வர் தமிழகம் வருகை

சென்னை: திருவாரூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தினை திறந்து வைக்க, வரும் 20ம் தேதி பீகார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் தமிழகம் வருகின்றனர். திருவாரூர் மாவட்டம், காட்டூரில் 7 ஆயிரம் சதுர அடியில் ரூ. 12 கோடி மதிப்பீட்டில் சென்னை தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தில் இரண்டு திருமண மண்டபங்கள், முத்துவேலர் நூலகம் மற்றும் கலைஞரின் முழு உருவ சிலை போன்றவை அமைக்கப்பட்டுள்ளது. மிக பிரம்மாண்டமாக திருவாரூர் தேர் போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

இதன் திறப்பு விழா வரும் 20ம் தேதி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. கலைஞர் கோட்டத்தை பீகார் முதல்வர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். அதேபோல, முத்துவேலர் நூலகத்தை பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்த திறப்பு விழாவிற்கு முன்னதாக வைரமுத்து தலைமையில் கவியரங்கமும், சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றமும் நடைபெற உள்ளன.மேலும் இந்த விழாவில் அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post திருவாரூரில் 20ம் தேதி கலைஞர் கோட்டம் திறப்பு விழா: பீகார் முதல்வர், துணை முதல்வர் தமிழகம் வருகை appeared first on Dinakaran.

Tags : 20th Artist Gotam ,ceremony ,Thiruvarur ,Bihar ,Deputy Chief ,Tamil Nadu ,Chennai ,Chief Minister ,Nitishkumar ,Deputy Chief Minister of ,Deputy Chief Minister of India ,Artist Gotam Opening Festival ,Deputy Chief of ,
× RELATED பொன்னமராவதி அருகே புதுப்பட்டியில்...