×

தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை!

சென்னை: தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 8 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். முன்பு வருமானவரித்துறை சோதனையின் போது செந்தில் பாலாஜி வீட்டில் சோதனை செய்யப்படவில்லை. அவரின் தம்பி வீடு, உறவினர்கள் வீட்டில்தான் சோதனை செய்யப்பட்டது. ஆனால் இந்த முறை சென்னையில் அமைச்சர் இல்லத்திலேயே சோதனை நடக்கிறது. சென்னையில் உள்ள அமைச்சரின் அரசு இல்லம், ஆர்.ஏ.புரம், அபிராமபுரத்தில் உள்ள இல்லங்களிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

5 வாகனங்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஒவ்வொரு இடங்களிலும் சோதனை செய்து கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், சென்னையில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் வீட்டின் முன் சி.ஆர்.பி.எப் காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். தலைமைச்செயலகத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அலுவலக உதவியாளர் விஜயகுமாரை அழைத்துக் கொண்டு அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

முக்கிய ஆவணங்கள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் உள்ளதா? என்பதை கண்டறிய அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் அலுவலகத்திற்கு வங்கி அதிகாரிகளையும் அழைத்து சென்று அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன்பு துணை ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டின் முன் 20 பேர் கொண்ட துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

The post தலைமைச் செயலகத்தில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜியின் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை! appeared first on Dinakaran.

Tags : Minister ,Senthilepalaji ,Chennai ,Senthil Balaji ,Dinakaran ,
× RELATED மதவெறி பிடித்துள்ள பாஜக நாட்டுக்கு...