×

கொடைக்கானலில் விளைச்சல் குறைவு பிச்சிஸ் பழங்கள் விலை அதிகரிப்பு

கொடைக்கானல் : கொடைக்கானலை சுற்றியுள்ள பள்ளங்கி, அட்டுவம்பட்டி, வில்பட்டி, சின்ன பள்ளம், பெரும்பள்ளம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக இருக்கிறது. இதில் மலை காய்கறிகள் மட்டுமின்றி மலை பழங்களும் பிரசித்தி பெற்றதுதான். இப்பகுதிகளில் பிளம்ஸ், பிச்சிஸ், பேரிக்காய், அவக்கோடா உள்ளிட்ட மலை பழங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. கோடைகாலத்தில் அதிகளவில் பிளம்ஸ், பிச்சிஸ் அறுவடை செய்யப்படுவது வழக்கம்.

மேலும் கோடைகாலத்து சீசன் பழங்களில் இந்த பிச்சிஸ் பழங்கள் வில்பட்டி, பெருமாள்மலை, பேத்துப்பாறை, வடகவுஞ்சி, உள்ளிட்ட பகுதிகளில் விளையக்கூடியது. மேலும் மரங்களில் விளையக்கூடிய பிச்சிஸ் பழங்கள் மே மாதத்தில் அறுவடை துவங்கும். தற்போது பழங்களின் அறுவடை துவங்கியுள்ள நிலையில் ஒரு கிலோ பிச்சிஸ் பழத்தின் விலை ரூ. 200 வரை விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் கடந்த ஆண்டைவிட பிச்சிஸ் பழ விளைச்சல் குறைவாக உள்ளதால் முழுமையான மகிழ்ச்சியை விவசாயிகள் அடைய முடியவில்லை. தற்போது துவங்கியுள்ள இந்த பிச்சிஸ் பழ மகசூல் இம்மாத கடைசி வரை இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

The post கொடைக்கானலில் விளைச்சல் குறைவு பிச்சிஸ் பழங்கள் விலை அதிகரிப்பு appeared first on Dinakaran.

Tags : Kodaikanal ,Pallangi ,Attuwambatti ,Wilpatti ,Chinna Pallam ,Perumpallam ,
× RELATED யானைகள் புகுந்து அதகளம் பேரிஜம் ஏரிக்கு செல்ல மீண்டும் தடை