×

புதியதாக 1,021 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி

சென்னை: மருத்துவர்கள் பணிச்சுமையால் இறப்பு என்பது தவறான தகவல்; மருத்துவர்களுக்கு பணிச்சுமை இல்லை என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மருத்துவர்களுக்கு பற்றி போலி வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் கூறியுள்ளார். 1,021 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றும் அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.

1,021 மருத்துவர் பணியிடங்களுக்கு 25000 பேர் தேர்வு எழுதி இருக்கிறார்கள். தமிழ் தகுதி தேர்வு எழுதியதற்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இறுதி தேர்வுகளின் முடிவுகள் விரைவில் வெளியிடப்படுகிறது. 980 மருந்தாளர்களுக்கு 43000 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த இரண்டு பணியிடங்களுக்கு விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கூறியுள்ளார். கடந்த ஆண்டுகளில் கொரோனா காலகட்டத்தில் மருத்துவர்களின் பனி அதிகமாக இருந்தது. இந்த ஆண்டு மருத்துவர்களுக்கு பணிச்சுமை இல்லை என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். காலி பணியிடங்களை நிரப்ப அனைத்து நடவடிக்கையும் மேற்கொண்டு இருக்கிறோம். 500 மருத்துவமனைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார் அந்த மருத்துவனமனைகளுக்கு புதியதாக தான் மருத்துவரை தேர்வு செய்துள்ளோம்.

கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மருத்துவமனை நாளை மறுநாள் திறக்கப்படவுள்ளது. இந்த மருத்துவமனைக்கு இணை பேராசிரியர் 30 பேர் உதவி பேராசிரியர் 130 பேர் காலி பணியிடங்களுக்கு கவுன்சிலிங் நடந்த உள்ளோம். தனி இயக்குனர், உதவி நிலைய மருத்துவர் விரைவில் நியமிக்கப்படவுள்ளனர். மருத்துவமனை நிர்வாகம் சிறப்பாக செய்வதற்கு புதியதாக 757 பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. 757 பணியிடங்களுக்கான அரசாணை நேற்று வெளியாகியுள்ளது. இன்றுமுதல் காளி பணியிடங்கள் நிரப்பபடவுள்ளது. காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு முக்கியமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி அளித்துள்ளார்.

 

 

 

 

 

The post புதியதாக 1,021 மருத்துவர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுத்து வருகிறோம்: அமைச்சர் மா.சுப்ரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Ma. Subramanian ,Chennai ,Department of Medicine and People's Wellbeing ,Dinakaran ,
× RELATED உடல் பருமன் சிகிச்சையில் இளைஞர்...