×

தோகைமலை, கடவூர் பகுதியில் கோடை மழையால் தரிசு நிலத்தில் புற்களை மேயும் கால்நடைகள்

தோகைமலை : கரூர் மாவட்டம் தோகைமலை மற்றும் கடவூர் ஒன்றிய பகுதிகளில் கடந்த மாதம் தொடர்ந்து பெய்த கோடை மழையால் குளிர்ச்சி ஏற்பட்டு வந்தது. தற்போது வெயிளின் தாக்கம் கடுமையாக இருப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

கடந்த மாதம் 23ம் தேதி அன்று தொடங்கிய மழையால் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்தது. அக்னி நட்சத்திரம் தொடங்கிய போது பெய்த மழையால் அக்னி நட்சத்திர வெயில் தாக்கம் குறைந்து குளிர்ச்சி ஏற்பட்டது. கோடை காலத்தில் தரிசு நிலங்கள் காய்ந்து இருந்த நிலையில் கடந்த மாதம் பொழிந்த மழைக்கு தரிசு காடுகளில் புற்கள் முளைத்து பசுமையாக காணப்படுகிறது.

இதனால் தற்போது கால்நடைகளுக்கு தீவனமாக பயன்பட்டு வருகிறது. மீண்டும் தற்போது கடுமையான வெயில் தாக்கம் ஏற்பட்டு பொதுமக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில் தரிசு காடுகளில் வளரும் புற்களும் காயும் நிலை ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் தரிசு நிலங்களில் வளர்ந்துள்ள புற்களை அதிகளவிலான ஆடுகள் மேய்ந்து வருகின்றன.

The post தோகைமலை, கடவூர் பகுதியில் கோடை மழையால் தரிசு நிலத்தில் புற்களை மேயும் கால்நடைகள் appeared first on Dinakaran.

Tags : Tokaimalai, Kadavur ,Thokaimalai ,Kadavur ,Karur ,Dinakaran ,
× RELATED ஜூலை, ஆகஸ்ட் மாதம் நடவுக்கு ஏற்ற...