×

NExT என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: NExT என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில்; இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த தேசிய அளவிலான தேர்வாகவும், முதுகலை மாணவர் சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வாகவும் ஒன்றிய அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள NExT என்ற தேசிய மருத்துவ தகுதித் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மருத்துவ மாணவர் சேர்க்கையில், நீட் தேர்வு ஏற்கெனவே மோசமான பாதிப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், NExT தேர்வை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கும், மாநில அரசின்கீழ் இயங்கும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் பெரிய பாதிப்பினை ஏற்படுத்தும் என்பதால், NExT தேர்வு முறையினைக் கைவிட வேண்டுமென்றும், தற்போதுள்ள முறையே தொடர வேண்டும் என்றும் மாண்புமிகு முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

The post NExT என்ற தேசிய மருத்துவத் தகுதித் தேர்வை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Tags : Union Govt ,PM ,Chief Minister ,G.K. Stalin ,Chennai ,PM Modi ,Union Government ,B.C. ,Dinakaran ,
× RELATED மோசடி குறுஞ்செய்திகளை அனுப்பிய...