×

பா.ஜ.க-வை கழற்றிவிடும் அதிமுக?: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக ஆலோசனை

சென்னை: ஊழல் குறித்து பேச அண்ணாமலைக்கோ, பாஜகவுக்கோ தகுதி இல்லை என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி.சண்முகம் ஆவேசமாக தெரிவித்துள்ளார். விருப்பம் இல்லாவிட்டால் பாஜக கூட்டணியை விட்டு வெளியேறலாம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பா.ஜ.க-வுடன் கூட்டணி முறிகிறதா?: அதிமுக ஆலோசனை

பா.ஜ.க-வுடனான கூட்டணியை முறித்துக் கொள்வது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா பற்றி அண்ணாமலை விமர்சனத்தால் அதிமுக – பா.ஜ.க இடையே மோதல் முற்றியது. மோதல் முற்றிய நிலையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ள அதிமுக நிர்வாகிகள் அண்ணாமலைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பா.ஜ.க-வை கழற்றிவிட அதிமுக திட்டம்?:

பா.ஜ.க-வுக்கு சாவுமணி அடிக்கப்போகும் எடப்பாடி என்று அதிமுக தொண்டர்கள் முழக்கமிட்டனர். விருப்பமில்லாவிட்டால் அதிமுக கூட்டணியில் இருந்து பா.ஜ.க. வெளியேறலாம் என்று சி.வி.சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். பா.ஜ.க-வுடன் கூட்டணி தொடருமா என்பது குறித்து அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்துக்கு பின் தெரிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்ணாமலைக்கு அதிமுக கடும் எச்சரிக்கை:

ஜெயலலிதா பற்றி பேசினால் அண்ணாமலை வீட்டின் முன் போராட்டம் நடத்துவோம் என்று அதிமுக தொண்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஜெயலலிதா பற்றி மீண்டும் பேசினால் அண்ணாமலை கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அதிமுக தொண்டர்கள் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க-வுடன் கூட்டணியை தொடரக்கூடாது என்று அதிமுக தொண்டர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post பா.ஜ.க-வை கழற்றிவிடும் அதிமுக?: மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அதிமுக ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Pa. J.J. ,District Secretaries ,Chennai ,Anamalaynor ,Bhajagu ,CM ,Sangmukam ,
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!