×

கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டவர் சிறிதுநேரத்தில் உயிரிழந்துள்ளார்: போலீசார் தீவிர விசாரணை

கோவை: கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டவர் சிறிதுநேரத்தில் உயிரிழந்தார். கோவை தெற்கு தொகுதி பா.ஜ,க. எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் அலுவலகத்துக்கு நேற்று மாலை இளைஞர் ஒருவர் வந்துள்ளார். அலுவலகத்துக்குள் நுழைந்து உள்பக்கமாக தாழிட முயன்றதாக கூறி உதவியாளர் ஒருவர் வெளியே தள்ளியுள்ளார். தள்ளிவிடப்பட்டவர் சாலையில் விழுந்து விழுந்து சென்ற சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பா.ஜ.க. எம்.எல்.ஏ. அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்ட இளைஞர் சிறிதுநேரத்தில் சாலையோரத்தில் உயிரிழந்து கிடந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.

கோவை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் தற்போது எம்.எல்.ஏ. வாக இருக்கக்கூடிய வானதி சீனிவாசன் இருந்துள்ளனர், இந்த நிலையில் மாலை சுமார் 6 மணி அளவில் அவரது அலுவலகத்திற்கு புகுந்த இளைஞர் ஒருவர் அலுவலகத்துக்குள் புகுந்து உள்ளே தாழிட முயன்றார், அப்போது அலுவலகத்தில் பணியாற்றி கொண்டிருந்த நபர் அந்த இளைஞரை வெளியே தரதரவென இழுத்து வெளியே கதவை விட்டு வெளியே தள்ளிவிட்டார். இதனை தொடர்ந்து சுமார் 8.30 மணி அளவில் விஜயன் பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர், அத்துமீறி அலுவலகத்திற்குள் வந்து தாழிட முயன்றதாக புகார் அளிக்கின்றனர்.

இந்த புகாரின் அடிப்படையில் முதல் கட்டமாக ஒரு CSR பதிவு செய்யப்படுகிறது. இந்த நிலையில் அந்த பா.ஜ.க. அலுவலகத்திற்குள் புகுந்த இளைஞர் அந்த அலுவலகத்திற்கு அருகே இறந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் இந்த விபத்தினால் உயிரிழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தற்போது போக்குவரத்து புலனாய்வு போலீசார் அந்த இறந்த அடையாளம் தெரியாத நபரின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரதாபரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் இறந்தவர் யார் எதற்காக உள்ளே வந்தார் என்ற கோணத்தில் விசாரணை என்பது நடைபெற்று வருகின்றது. முன்னதாக கடந்த 6 மணி அளவில் பா.ஜ.க. அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த இளைஞர் 3 மணி நேரத்திற்குள் அலுவலகத்திற்கு அருகாமையில் இருக்கக்கூடிய சாலையில் சடலமா மீட்கப்பட்ட சம்பவம் தற்போது காண்போரை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வழக்கு விபத்து வழக்காக பதிவு செய்த போக்குவரத்து புலனாய்வு போலீசார் தற்போது விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

The post கோவை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து வெளியே தள்ளிவிடப்பட்டவர் சிறிதுநேரத்தில் உயிரிழந்துள்ளார்: போலீசார் தீவிர விசாரணை appeared first on Dinakaran.

Tags : Govai Pa. J.J. G.K. ,Govay ,Govay Pa. J.J. G.K. ,South Block Pa. Ja, K. ,MM l. ,PA ,Cove ,J.J. G.K. ,Dinakaran ,
× RELATED திருப்பூர், கோவை மாவட்டத்தில் ரூ.1,000...