×

வேலூர் அருகே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்: 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் 500 ஆடுகள் விற்பனை

வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு அவரவர் வசதிக்கேற்ப ஆடுகளை வாங்கி கூறுபோட்டு உறவினர்கள், நண்பர்கள் குடும்பத்துக்கு பிரித்து கொடுப்பார்கள். இந்நிலையில், பக்ரீத் பண்டிகையை ஒட்டி காட்பாடி அருகே உள்ள கே.வி.குப்பம் ஆட்டு சந்தைக்கு 50-க்கு மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சுமார் 500 ஆடுகளை கொண்டு வந்திருந்தனர். சிறிய ஆடுகள் ரூ.10,000 வரையிலும், பெரிய ஆடுகள் ரூ.40,000 முதல் ரூ.50,000 வரையிலும் விலை போயின.

அதிலும் வெள்ளாடு, செம்மறி, நெல்லூகிடா போன்றவை விறுவிறுவென விற்பனை ஆகின. வரும் 29-ம் தேதி பக்ரீத் பண்டிகை வருவதை முன்னிட்டு சென்னை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் கர்நாடக, ஆந்திர பகுதிகளில் இருந்தும் வந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்கி சென்றனர். கே.வி.குப்பம் சந்தைக்கு வரக்கூடிய ஆடுகள் வனப்பகுதிகளில் இயற்கையாக மண்டிய செடிகளை உண்டு வளர்வதால் இவற்றின் கறிக்கு தனி மவுசு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

The post வேலூர் அருகே பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அமோகம்: 50 கிராமங்களை சேர்ந்த விவசாயிகளின் 500 ஆடுகள் விற்பனை appeared first on Dinakaran.

Tags : Bakreet Festival ,Vellore ,Bakreet ,Gadbadi, Vellore district ,Dinakaran ,
× RELATED உல்லாசமாக இருந்துவிட்டு ஏமாற்ற...