×

அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

 

சென்னை: அமலாக்கத்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். சென்னை, கரூரில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். மத்திய படையினர் பாதுகாப்புடன் செந்தில்பாலாஜி சகோதரர் அசோக் வீட்டில் சோதனை நடைபெற்று வருகிறது. கரூரில் அமைச்சரின் வீடு, சகோதரர் அசோக் வீடு நண்பர் கொங்கு மெஸ் மணி வீடு உள்ளிட்ட 5 இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர்.

அரசு போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக குறி ஏமாற்றியதாக தொடரப்பட்ட வழக்கில் சோதனை மேற்கொண்டுள்ளனர். வழக்கில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. உயர்நீதிமன்றம் விதித்த தடையை அண்மையில் உச்சநீதிமன்றம் நீக்கியதை அடுத்து சோதனை மேற்கொண்டுள்ளனர். சென்னை அபிராமபுரத்தில் உள்ள செந்தில்பாலாஜியின் சகோதரர் அசோக் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டுள்ளனர்

அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

அமலாக்கத்துறை சோதனை குறித்து சட்டப்படி எனக்கு தகவல் கொடுக்க வேண்டும் என்பது இல்லை. வருமான வரித்துறையில் பறிமுதல் செய்த விவரங்கள் குறித்து ஏற்கனவே விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை சோதனை முடிந்த பிறகு முழு விவரம் தெரியவரும். அதிகாரிகளின் சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். ஆவணங்கள் குறித்து விளக்கம் கேட்டால் விளக்கம் அளிக்க தயாராக இருக்கிறேன்.

அமலாக்கத்துறை விசாரணைக்கு நேரில் ஆஜராக இருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். அமலாக்கத்துறையோ, வருமான வரித்துறையோ யாராக இருந்தாலும் முழு ஒத்துழைப்பு அளிப்பேன். என்ன நடக்கிறது என்று பொறுத்து இருந்து பார்ப்போம். சோதனை முடிவில் தான் என்ன நோக்கத்துடன் வந்துள்ளார்கள் என்று தெரியும்” என்றார்.

 

 

The post அமலாக்கத்துறை, வருமான வரித்துறை சோதனைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன்: அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி appeared first on Dinakaran.

Tags : Minister ,Chenthilpolaji ,Chennai ,Senthil Balaji ,Chennai, Karur ,Enforcement Department ,Senthilepalaji ,Dinakaran ,
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...