×

அதி தீவிரத்திலிருந்து.. மிக தீவிர புயலாக வலுவிழந்தது ‘பிபர்ஜாய்’ புயல்.. உஷார் நிலையில் குஜராத்: 67 ரயில்கள் ரத்து!!

அகமதாபாத்: அரபிக்கடலில் மையம் கொண்டு இருந்த பிபர்ஜாய் புயல் மிக தீவிர புயலாக வலுவிழந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி பிபர்ஜாய் புயலாக உருவெடுத்துள்ளது. தற்போது இந்த புயலானது வடகிழக்கு , ஒட்டிய மத்திய வழக்கு அரபிக்கடலில் ஜக்காவு துறைமுகத்திற்கு 360 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிமீ வேகத்தில் நகர்ந்து செல்லும் இந்த புயல், நாளை காலை வரை வடக்குப்பகுதியை நோக்கி நகர்ந்து, அதன்பிறகு வடக்கு – வடகிழக்குப்பகுதியை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நாளை மறுநாளான ஜூன் 15ம் தேதி பிற்பகலில் மாண்ட்வி (குஜராத்)- கராச்சி (பாகிஸ்தான்) இடையே ஜக்காவ் துறைமுகம் (குஜராத்) அருகே பாகிஸ்தான் கடலோரப் பகுதியையொட்டி சௌராஷ்டிரா, கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் என்றும் புயல் கரையை கடக்கும் போது காற்று மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசக் கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதையடுத்து குஜராத்தில் கட்ச் வளைகுடா கடலோரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக 67 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வேத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே தேசிய பேரிடர் மீட்பு படையின் 12 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

The post அதி தீவிரத்திலிருந்து.. மிக தீவிர புயலாக வலுவிழந்தது ‘பிபர்ஜாய்’ புயல்.. உஷார் நிலையில் குஜராத்: 67 ரயில்கள் ரத்து!! appeared first on Dinakaran.

Tags : Bibarzai ,Gujarat ,Ahmedabad ,Indian Meteorological Survey Centre ,Arab Sea ,Dinakaran ,
× RELATED குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல...