×

விபத்தில் பெண் உட்பட மூவர் காயம்

 

சிவகாசி, ஜூன் 13: சிவகாசி ரிசர்வ் லைன் சிலோன் காலனி ராஜேஸ்வரன். இவர் தனது டூவீலரில் எஸ்.என்.புரம் ரோட்டில் சென்ற போது, மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த கோபி ஓட்டி வந்த கார் மோதியதில் காயமடைந்தார். திருத்தங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.குமிழங்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமராஜ். இவர் எரிச்சநத்தம் ரோட்டில் பஸ் ஏறுவதற்காக நடந்து சென்ற போது சித்தமநாயக்கன்பட்டியை சேர்ந்த சூரிய பிரகாஷ் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார். எம்.புதுப்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.விஸ்வநத்தம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள். இவர் வெற்றிலையூரணி செல்லும் ரோட்டில் நடந்து சென்ற போது முத்துக்குமார் ஓட்டி வந்த டூவீலர் மோதியதில் காயமடைந்தார்.

The post விபத்தில் பெண் உட்பட மூவர் காயம் appeared first on Dinakaran.

Tags : Sivakasi ,Sivakasi Reserve Line Ceylon ,Colony Rajeswaran ,S.N.puram ,
× RELATED குடும்ப தகராறில் வாலிபர் தற்கொலை