×

கீழக்கரை மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் வழங்கல்

கீழக்கரை, ஜூன் 13: கீழக்கரை இஸ்லாமியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளியில் மாவட்டத்தின் பல்வேறு பகதிகளில் இருந்து வந்த கராத்தே பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு தகுதி அடிப்படையில் கராத்தே பெல்ட் வழங்கும் விழா நடந்தது. பள்ளி தாளாளர் முகைதீன் இபுராகிம் தலைமை தாங்கினார். மாவட்ட கென்சிகாய் கொஜீ ரியூ சுராத்தே பயிற்சியாளர் சசிகுமார் வரவேற்றார். கராத்தே ஆசிய பயிற்சியாளர் கியேசி சேகர் முன்னிலை வகித்தார்.

விழாவில் 3 மாத காலம் தொடர் பயிற்சி பெற்ற 43 பேருக்கு மஞ்சள் பெல்ட், 6 மாதம் பயிற்சி பெற்ற 18 பேருக்கு ஆரஞ்சு பெல்ட், 6 பேருக்கு பச்சைபெல்ட். 1 வருடம் பயிற்சி பெற்ற 8 பேருக்கு நீல பெல்ட். ஒரு வருடத்திற்கு மேல்பயிற்சி பெற்ற 8 பேருக்கு கரு நீல பெல்ட், 2 வருடம் பயிற்சி பெற்ற 12 பேருக்கு பிரவுன்பெல்ட் வழங்கப்பட்டது. பள்ளி தாளாளர் முகைதீன் இபுராகிம், ஆசிய பயிற்சியாளர் கியேசி சேகர் ஆகியோர் மாணவ,மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் கராத்தே பெல்ட் வழங்கினர். முடிவில் பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ் நன்றி கூறினார்.

The post கீழக்கரை மாணவர்களுக்கு கராத்தே பெல்ட் வழங்கல் appeared first on Dinakaran.

Tags : Keezakarai ,Keezakarai Islamia Matriculation High School ,Dinakaran ,
× RELATED அழகுக்கு மெருகேற்றும் வளையல்கள்!