×

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம்

 

தொண்டி, ஜூன் 13: தொண்டி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ராமேஸ்வரம் தேவசபை பில்லி கிரஹாம் மற்றும் இந்தியன் ரெட் கிராஸ் அமைப்பும் இணைந்து சக்கர நாற்காலிகள் மருத்துவமனை மருத்துவர்களிடம் வழங்கப்பட்டது. தொண்டி பேரூராட்சி தலைவர் ஷாஜகான் பனு ஜவஹர் அலி கான் தலைமை தாங்கினார். இந்தியன் ரெட்கிராஸ் சேர்மன் சுந்தரம், உறுப்பினர் கமாலுதீன், கபீர் சாதிக், புரவலர் உலகராஜ், பொருளாளர் குணசேகரன், இணைச் சேர்மன் பருக் அப்துல்லா, பரமேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஏற்பாடு ரெட்கிராஸ் மாவட்ட செயலாளர் ரமேஷ் செய்திருந்தார். செக்காந்திடல் கிராமத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் இருவருக்கு சக்கர நாற்காலிகள் வழங்கப்பட்டன.

The post மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டம் appeared first on Dinakaran.

Tags : Thondi ,Rameswaram Devasabha ,Thondi Primary Health Center Billy Graham ,Indian Red… ,Dinakaran ,
× RELATED காளையார்கோவில் பகுதியில் காவிரி...