×

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சேனைக்கிழங்கு விலை உயர்வு

 

ஒட்டன்சத்திரம்ம, ஜூன் 13: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டில் சேனைக்கிழங்கு விலை உயர்ந்துள்ளது. ஒட்டன்சத்திரம் சுற்றுவட்டாரப் பகுதிகளான தங்கச்சியம்மாபட்டி, அம்பிளிக்கை, கள்ளிமந்தையம், கரியாம்பட்டி, பொரு;ளூர், காளாஞ்சிபட்டி, லெக்கையன்கோட்டை, விருப்பாட்சி, சிந்தலவாடம்பட்டி, ஸ்ரீராமபுரம் ஆகிய பகுதியில் ஏராளமான விவசாயிகள் சேனைக்கிழங்கு விவசாயம் செய்து வருகின்றனர்.

தற்பொழுது ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு சேனைக்கிழங்கு வரத்து குறைந்துள்ளது. கடந்த மாதம் ஒரு கிலோ சேனைக்கிழங்கு ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் தற்போது வரத்து குறைவால் ஒரு கிலோ ரூ.42க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் இருந்து சேனைக்கிழங்கு கேரளா, ஆந்திரா, கர்நாடாக உட்பட நகரங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

The post ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் சேனைக்கிழங்கு விலை உயர்வு appeared first on Dinakaran.

Tags : Otanchatram ,Othanchathram ,Thangachiammapatti Gandhi ,Dindigul district ,Ottanchatram… ,Ottanchatram ,Dinakaran ,
× RELATED கோடை வெயிலால் காய்கறி விளைச்சல்...