×

சென்னிமலையில் திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம்

 

சென்னிமலை, ஜூன் 13: ஈரோடு மாவட்டம், சென்னிமலை அடுத்த எக்கட்டம்பாளையம் ஊராட்சி வாய்க்கால்புதூர் எம்ஜிஆர் நகரில் தி.மு.க. அரசின் 2 ஆண்டு கால சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தி.மு.க. சென்னிமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் பிரபு தலைமை தாங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ரவிச்சந்திரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் மெய்யப்பன், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் சதீஷ் என்ற சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தலைமை கழக பேச்சாளர்கள் அல்தாப், திருப்பூர் சந்துரு ஆகியோர் பங்கேற்று, ‘ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி’ என்ற தலைப்பில், திமுக அரசு கடந்த 2 ஆண்டில் செய்த சாதனைகள், மக்கள் நலத்திட்டங்கள் குறித்து பேசினர். கூட்டத்தில் சென்னிமலை கிழக்கு ஒன்றிய அவை தலைவர் சிதம்பரசாமி, ஒன்றிய துணை செயலாளர் சாமியாத்தாள், பொருளாளர் பெரியசாமி, மாவட்ட பிரதிநிதி ஜெகநாதன், குமார், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் ராஜேந்திரன், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிநாதன், எக்கட்டாம்பாளையம் ஊராட்சி செயலாளர் முருகேஷ், இளைஞரணி துணை அமைப்பாளர்கள் வாசுதேவன், செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post சென்னிமலையில் திமுக அரசின் சாதனை விளக்க கூட்டம் appeared first on Dinakaran.

Tags : DMK government ,Chennimalai ,Sennimalai ,Erode District ,Ekattambalayam Panchayat Vaikkalputur ,MGR ,Nagar ,DMK ,Dinakaran ,
× RELATED சென்னிமலை பேரூராட்சியில் பழுதடைந்து கிடக்கும் பேட்டரி வாகனங்கள்