×

தண்டையார்பேட்டை மண்டலக்குழு கூட்டத்தில் ₹10 கோடி பணிகளுக்கு தீர்மானம்

தண்டையார்பேட்டை, ஜூன் 13: தண்டையார்பேட்டை மண்டலக்குழு கூட்டத்தில் ₹10 கோடி பணிகளுக்கு 73 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சென்னை மாநகராட்சி 4வது மண்டலக்குழு கூட்டம் தண்டையார்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாநகராட்சி மண்டலக்குழு தலைவர் நேதாஜி கணேசன் தலைமை வகித்தார். இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு உறுப்பினர்களும் தங்களது வார்டில் நடைபெற வேண்டிய பணிகள் குறித்து பேசினர். மேலும் மாமன்ற உறுப்பினர்களின் பிரச்னைகளை மண்டலக்குழு தலைவர், அதிகாரிகளிடம் கூறி உடனடியாக சரிசெய்து கொடுக்க உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து ₹10 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு 73 தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முக்கிய தீர்மானமாக மாநகராட்சி பள்ளியை மேம்படுத்த ₹86 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஒவ்வொரு வார்டுகளிலும் புதிதாக சாலை அமைப்பது, குடிநீர், மின்சாரம் தடையின்றி வழங்குவது, கழிவுநீர் அடைப்பை சரி செய்வது, பூங்காக்களை பராமரிப்பது போன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிதாக தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் குழு சார்பில் 633 தற்காலிக பணியாளர்களை பணியில் அமர்த்துவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொதுமக்கள் சிரமமின்றி பிறப்பு, இறப்பு சான்றிதழை பெற்றிட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. கலைஞர் பிறந்தநாள் விழாவை ஓராண்டு சிறப்பாக கொண்டாடும் விதமாக இதில் முடிவு செய்யப்பட்டது.

The post தண்டையார்பேட்டை மண்டலக்குழு கூட்டத்தில் ₹10 கோடி பணிகளுக்கு தீர்மானம் appeared first on Dinakaran.

Tags : Thandaiyarpet Zonal Committee ,Thandaiyarpet ,Chennai Municipal Corporation ,Dinakaran ,
× RELATED சவுகார்பேட்டையில் ஐபிஎல்...