×

பள்ளிகள் திறந்த முதல்நாளிலேயே ஓரிக்கை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: சிக்கி தவித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஓரிக்கை சாலையில் பள்ளிகள் திறந்த முதல்நாளான நேற்று, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில், பொதுமக்கள், மாணவர்கள் சிக்கி கடுமையாக பாதிக்கப்பட்டனர். காஞ்சிபுரம் ஓரிக்கை மிலிட்டரி ரோடு அருகே நான்கு முனை சந்திப்பு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த சந்திப்பில் காஞ்சிபுரம் – செய்யார் செல்லும் சாலை மற்றும் காஞ்சிபுரத்தில் இருந்து பெரியார் நகர், தாம்பரம் செல்லும் சாலை காஞ்சிபுரம் மாநகராட்சிக்குள் பல்வேறு பகுதிகளில் இருந்து வருவதற்கு இந்த சாலையை அதிகளவிலான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், இந்த சாலையில் கனரக வாகனங்கள், மண், ஜல்லி போன்றவற்றை ஏற்றிக்கொண்டு தினம்தோறும் இந்த சாலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் சென்று வருகின்றன.

அந்த வகையில் நேற்று பள்ளிகள் திறப்பதால் மாணவர்களுடன் பெற்றோர்களும், வேலைக்கு செல்வோர் என அதிகமாக இந்த சாலையை பயணிக்கின்றனர். இந்நிலையில், கனரக வாகனங்கள் 11 மணிக்கு மேலே நகர் பகுதியில் வர அனுமதி இருந்தும் பள்ளிக்கு செல்லும் நேரத்தில் கனரா வாகனங்கள் லாரிகள் அதிகமாக வந்ததால் போக்குவரத்து நெரிசல் பாதிப்பு உண்டானது. இதனால், கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேலாக இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், போக்குவரத்து நெரிசலில் 108 ஆம்புலன்ஸ் சிக்கியது உடனடியாக பொதுமக்கள் களத்தில் இறங்கி போக்குவரத்து நெரிசலை சரி செய்து 108 ஆம்புலன்ஸ்க்கு வழி விட்டனர்.

The post பள்ளிகள் திறந்த முதல்நாளிலேயே ஓரிக்கை சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்: சிக்கி தவித்த பொதுமக்கள் appeared first on Dinakaran.

Tags : Orikai Road ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு...