×

பழவூர், ஆவரைகுளம் பகுதிகளில் ₹1.20 கோடியில் துணை சுகாதார நிலைய கட்டிட பணி

பணகுடி, ஜூன் 13: நெல்லை மாவட்டம் ராதாபுரம் தொகுதியில் பழவூர், ஆவரைகுளம், யாக்கோபுரம்-சிதம்பரபுரம், தனக்கர்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ₹1 கோடியே 20 லட்சத்தில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டுமான பணிக்கு சபாநாயகர் அப்பாவு அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். பழவூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட பழவூர் புதுகாலனி துணை சுகாதார நிலைய கட்டிடம் பழுதடைந்து பயன்பாடு இல்லாத நிலையில் கட்டிடத்தில் செவிலியர் தங்கி பணி செய்யாத நிலை இருந்து வந்தது. இதுகுறித்து தமிழக சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து தற்போது துணை சுகாதார நிலையத்திற்கு ₹30 லட்சத்தில் புதிய கட்டிடம் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. அதேபோல ஆவரைகுளம், யாக்கோபுரம் – சிதம்பரபுரம், தனக்கர்குளம் உள்ளிட்ட பகுதிகளிலும் தலா ₹30 லட்சம் மதிப்பில் துணை சுகாதார நிலையம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் தமிழக சட்டப்பேரவைத்தலைவர் அப்பாவு, வள்ளியூர் ஒன்றிய குழுத்தலைவர் ராஜாஞான திரவியம் அடிக்கல் நாட்டி, கட்டுமானப்பணிகளை தொடங்கி வைத்தனர்.

விழாவில் நெல்லை மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குநர் ராஜேந்திரன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கோலப்பன், கட்டிட கட்டுமானப்பிரிவு உதவி செயற்பொறியாளர் ஜெயந்தி, உதவி பொறியாளர் சாமுவேல், நான்குநேரி ஒன்றிய திமுக செயலாளர் ஆரோக்ய எட்வின், மாவட்ட கவுன்சிலர் பாஸ்கர், நெல்லை மாவட்ட டாக்டர் கலைஞர் கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்க செயலாளர் இசக்கியப்பன், துணைத்தலைவர் அரிச்சந்திரன், வள்ளியூர் ஒன்றிய திமுக அவைத்தலைவர் வேலு ஆசிரியர், கிளைத்தலைவர் பாடகர் ஆறுமுகம், செயலாளர் முருகன், சுடலைமணி, பிரேம்காந்த், பால்ராஜ், உள்ளாட்சி ஊராட்சி பிரதிநிதிகள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

The post பழவூர், ஆவரைகுளம் பகுதிகளில் ₹1.20 கோடியில் துணை சுகாதார நிலைய கட்டிட பணி appeared first on Dinakaran.

Tags : Palavoor ,Avarikulam ,Panagudi ,Palavur ,Yakkopuram ,Chidambarapuram ,Tanakarkulam ,Radhapuram ,Nellai district ,
× RELATED வடக்கன்குளம் எஸ்ஏவி பள்ளியில் திருவாசகம் முற்றோதுதல்