×

குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

தூத்துக்குடி, ஜூன் 13: தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு அலுவலர்கள், போலீசார் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றனர். தூத்துக்குடி கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் சர்வதேச குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன் தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை ஏற்றனர். தொடர்ந்து குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு பிரசார வாகனத்தையும், விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தையும் மாவட்ட வருவாய் அலுவலர் தொடங்கி வைத்தார். மேலும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நின்ற வாகனங்களில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஒட்டினார்.
நிகழ்ச்சியில் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி பாலாஜி சரவணன் தலைமையில் அமைச்சு பணியாளர்கள் மற்றும் போலீசார் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இதில் ஏடிஎஸ்பி கார்த்திகேயன், டிஎஸ்பிகள் சத்யராஜ், ஜெயராம், இன்ஸ்பெக்டர்கள் ரேனியஸ் ஜேசுபாதம், ஜெரால்டின் வினு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் ஜெகன் பெரியசாமி தலைமையில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. ஆணையர் தினேஷ் குமார் முன்னிலை வகித்தார். மாநகர் நல அலுவலர் சுமதி, உதவி ஆணையர்கள் தனசிங், சேகர், உதவி செயற்பொறியாளர்கள் சரவணன், பிரின்ஸ், திட்டம் ரங்கநாதன், ராமச்சந்திரன், அதிகாரிகள் காந்திமதி, ராஜபாண்டி, ராஜசேகர், ஹரிகணேஷ், ஸ்டாலின், மேயரின் நேர்முக உதவியாளர் ரமேஷ், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி உள்பட அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : Labor Day ,Tuticorin ,Anti-Child Labor Day ,Dinakaran ,
× RELATED உழைப்பாளர் தினம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து