×

குரும்பூர் பகுதியில் ₹41.50 லட்சத்தில் திட்டப்பணிகள்

திருச்செந்தூர், ஜூன் 13: குரும்பூர் பகுதியில் ₹41.50 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார். குரும்பூர் அருகே உள்ள சுகந்தலை பஞ்சாயத்து வெள்ளக்கோவில் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டித் தர வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ₹9.6 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதன் கட்டுமான பணி நேற்று துவங்கியது. பஞ்சாயத்து தலைவர் வெங்கடேசன் தலைமை வகித்தார். அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், ரேஷன் கடை கட்டுமான பணியை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். தொடர்ந்து அங்கமங்கலம் பஞ்சாயத்து குரும்பூர் முஸ்லிம் தெருவில் ₹10 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை பணியை துவக்கி வைத்த அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ₹21.90 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடம் மற்றும் சமையல் கூடத்தையும் திறந்து வைத்தார். இதில் தூத்துக்குடி மாவட்ட திட்ட இயக்குநர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராஜ், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பிரம்மசக்தி, திமுக வர்த்தக அணி இணை செயலாளர் உமரிசங்கர், ஆழ்வார்திருநகரி யூனியன் சேர்மன் ஜனகர், அங்கமங்கலம் பஞ்., தலைவர் பானுபிரியா பாலமுருகன், மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர் ராமஜெயம், ஆழ்வை ஒன்றிய திமுக செயலாளர்கள் நவீன்குமார், சதீஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் ரகுராம், நாலுமாவடி பஞ். துணை தலைவர் ராஜேஷ், புறையூர் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேஷ் நியூமென், துணை தலைமையாசிரியர் பெல்சியா, புறையூர் வெல்பேர் டிரஸ்ட் நிறுவனர் நாசர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post குரும்பூர் பகுதியில் ₹41.50 லட்சத்தில் திட்டப்பணிகள் appeared first on Dinakaran.

Tags : Kurumpur ,Tiruchendur ,Minister ,Anitha Radhakrishnan ,Kurumpur… ,
× RELATED பைக்கில் வீலிங் சாகசம்: 2 வாலிபர்கள் பரிதாப பலி