×

ஊட்டச்சத்து குறைபாடு போக்க குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்: தமிழகத்தில் முதன்முறையாக துவக்கம்

விழுப்புரம்: தமிழகத்தில் முதல்முறையாக ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை விழுப்புரத்தில் அமைச்சர்கள் பொன்முடி, கீதாஜீவன், செஞ்சி மஸ்தான் ஆகியோர் நேற்று துவக்கி வைத்தனர். இந்த விழாவில், கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். எம்எல்ஏக்கள் லட்சுமணன், புகழேந்தி, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதுகுறித்து அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், ‘செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும்திட்டம் தொடர்ச்சியாக தமிழ்நாடு முழுவதும் தொடர்ந்து செயல்படுத்தப்படவுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 36 லட்சம் குழந்தைகள் படித்து வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,11,000 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இக்குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட உள்ளது. இந்த பிஸ்கட் தொடர்ந்து 56 நாட்கள் வழங்கப்பட வேண்டும். 2 வயதுடைய குழந்தைகளுக்கு 60 கிராம் எடையுள்ள பிஸ்கட்டையும், 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30 கிராம் எடையுள்ள பிஸ்கட்டும் வழங்கிட வேண்டும். இதன் மூலம் குழந்தைகளின் உடல் எடை மற்றும் வளர்ச்சி ஏற்படும்’ என்றார்.

The post ஊட்டச்சத்து குறைபாடு போக்க குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட்: தமிழகத்தில் முதன்முறையாக துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Villupuram ,Ministers ,Ponmudi ,Geethajeevan ,Senchi ,
× RELATED சாலை விரிவாக்கத்தால் அகற்றம்...