×

நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகரம்தென்-கோவிலஞ்சேரி சாலையில் மரக்கன்றுகள்

சென்னை, ஜூன் 13: தமிழ்நாடு நெடுஞ்சாலை துறை சார்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவினை ஒட்டி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெடுஞ்சாலைகளில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழாவினை கடந்த 7ம் தேதி சென்னை கிண்டியில் நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் துவக்கி வைத்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று சென்னை மாநகரச் சாலைகள் கோட்டம், தாம்பரம் உட்கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள, அகரம்தென்-கோவிலஞ்சேரி சாலையில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் குரு சிறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், பெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர்.பாலு, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத், ஆணையாளர் தாம்பரம் மாநகராட்சி அழகு மீனா, தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் ராஜா, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி. துணை மேயர் காமராஜ், நெடுஞ்சாலைத்துறை மாநகர சாலைகள் கோட்டப் பொறியாளர் ரவி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

The post நெடுஞ்சாலைத்துறை சார்பில் அகரம்தென்-கோவிலஞ்சேரி சாலையில் மரக்கன்றுகள் appeared first on Dinakaran.

Tags : Akaramthen-Kovilanchery road ,Highways Department ,Chennai ,Tamil Nadu Highway Department ,Chief Minister ,Karunanidhi ,Highway Department ,Dinakaran ,
× RELATED ரூ.621 கோடி மதிப்பீட்டில், 3...