×

தமிழரை பிரதமராக்குவது இருக்கட்டும் முதலில் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரியுங்கள்: கனிமொழி எம்பி டிவிட்

சென்னை: தமிழரை பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள்” என்று கனிமொழி எம்பி கூறியுள்ளார்.
தமிழகத்திலிருந்து ஒருவர் பிரதமராக வர வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். இதுகுறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ‘‘தமிழரை பிரதமராக்குவோம் என்ற அமித்ஷாவின் அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அதன் உள்நோக்கம் புரியவில்லை” என்று கூறியிருந்தார். இந்நிலையில் திமுக துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்பி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘‘தமிழரை பிரதமராக்குவது இருக்கட்டும், தமிழை முதலில் ஒன்றியத்தில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாகவும் அங்கீகரியுங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

The post தமிழரை பிரதமராக்குவது இருக்கட்டும் முதலில் அலுவல் மொழியாக தமிழை அங்கீகரியுங்கள்: கனிமொழி எம்பி டிவிட் appeared first on Dinakaran.

Tags : Kanimozhi ,Dwitt ,Chennai ,Union ,
× RELATED தலைசிறந்த பொறுப்புகளில் மிளிர...