×

இலவசம் என்பதால் அரசு பஸ்சில் சும்மா, சும்மா பெண்கள் பயணம் செய்யக்கூடாது: கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ அறிவுறுத்தல்

தாவணகெரே: இலவசம் என்பதால் காரணம் இன்றி அரசு பேருந்துகளில் பயணம் செய்ய வேண்டாம் என்று காங்கிரஸ் எம்எல்ஏ அறிவுறுத்தியுள்ளார். கர்நாடகா மாநிலம் முழுவதும் பெண்களுக்கான இலவச பஸ் சேவை நேற்று முன்தினம் தொடங்கபட்டது. இதையொட்டி தாவணகெரே மாவட்டம், மாயகொண்டா தொகுதி எம்எல்ஏ கே.எஸ் பசவந்தப்பா, இலவச பயண திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது. `அரசு, பெண்களுக்காக இலவச பயண வசதியை வழங்கியுள்ளது. இதனை பெண்கள் தேவையான போது மட்டுமே பயன்படுத்த வேண்டும். காரணமின்றி பயணம் செய்ய வேண்டாம். இலவசம் கிடைக்கும் என்பதால் வாரக்கணக்கில் வேறு எங்காவது சென்றால், ஆண்கள் வேறு பாதையில் செல்வார்கள். அரசு இலவசமாக வழங்கும் வாய்ப்பை தேவைக்கேற்ப கோயில்கள், மருத்துவமனைகளுக்கு செல்ல பயன்படுத்த வேண்டும். அப்போது தான், திட்டத்துக்கு அர்த்தம் கிடைக்கும்’ என்றார்.

The post இலவசம் என்பதால் அரசு பஸ்சில் சும்மா, சும்மா பெண்கள் பயணம் செய்யக்கூடாது: கர்நாடகா காங்கிரஸ் எம்எல்ஏ அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Karnataka Congress ,Thavanagere ,Congress MLA ,Karnataka ,Dinakaran ,
× RELATED ஊருக்கே நல்ல தண்ணீர் கொடுக்கும்...