×

இந்தியா- யுஏஇ ரூ.8.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம் செய்ய இலக்கு

புதுடெல்லி: ஒன்றிய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,‘‘ ஐக்கிய அரபு எமிரேட்சும், இந்தியா இடையே எண்ணெய் அல்லாத வர்த்தகம் ரூ.3 லட்சத்து 95 ஆயிரம் கோடியாக உள்ளது. இதனை வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.8.25 லட்சம் கோடியாக உயர்த்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.’ என்றார். யுஏஇ நாட்டின் வெளிநாட்டு வர்த்தக துறை அமைச்சர் தனி பின் அகமது அல் ஸெயோதி பேசுகையில்,‘‘ மின்சக்தி,வளர்ந்து வரும் தொழில்நுட்பம், திறன்கள்,கல்வி, உணவு,மருத்துவம், பாதுகாப்பு மற்றும் ஸ்டார்ட் அப்துறைகளில் முதலீடுகளை செய்ய யுஏஇ விரும்புகிறது’’ என்றார்.

The post இந்தியா- யுஏஇ ரூ.8.25 லட்சம் கோடிக்கு வர்த்தகம் செய்ய இலக்கு appeared first on Dinakaran.

Tags : India ,UAE ,New Delhi ,Union Commerce and Industry Minister ,Piyush Goyal ,United Arab Emirates ,
× RELATED தொழில்நுட்பக் கோளாறால் உலகம்...