×

தமிழ்நாட்டில் 560 பார்களை மூடும் நீதிமன்ற உத்தரவால் வருவாய் இழப்பு ஏற்படும்: அரசு சார்பில் ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: தமிழ்நாட்டில் 560 பார்களை மூட நீதிமன்றம் உத்தரவிட்டதால் வருவாய் இழப்பு ஏற்படும் என்று அரசு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுபானக் கடைகளின் அருகில் தின்பண்டங்கள் விற்பனை செய்வது, காலி மதுபான பாட்டில்களை சேகரிப்பது தொடர்பான பார் உரிமங்களுக்கு டெண்டர் விண்ணப்பங்களை வரவேற்று டாஸ்மாக் நிர்வாகம் கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த அறிவிப்பாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, இந்த வழக்கில் இறுதி உத்தரவு பிறப்பிக்கும் வரை டாஸ்மாக் பார்களுக்கான டெண்டரை இறுதி செய்யக்கூடாது என உத்தரவிட்டிருந்தார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதியின் உத்தரவால் தமிழகம் முழுவதும் 560 பார்களை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. எனவே, வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டுமென கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் தலைமை நீதிபதி அமர்வில் முறையிட்டார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வரும் 19ம் தேதி வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

The post தமிழ்நாட்டில் 560 பார்களை மூடும் நீதிமன்ற உத்தரவால் வருவாய் இழப்பு ஏற்படும்: அரசு சார்பில் ஐகோர்ட்டில் முறையீடு appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,IC Chennai ,Tamilnadu ,
× RELATED ஆன்லைன் சூதாட்டம் பற்றி...