×

இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி மறைவு

ரோம்: இத்தாலி முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி நேற்று காலமானார். அவருக்கு வயது 86. தொழிலதிபரும், ஊடக மன்னரும், பெரும் பணக்காரருமான சில்வியோ 1994-95, 2001-2006 மற்றும் 2008-2011ம் ஆண்டுகளில் இத்தாலியின் பிரதமராக பதவி வகித்தார். இவர் இத்தாலி வரலாற்றின் நீண்ட நாள் பிரதமராவார். கொரோனா பாதிப்பின் போது இதய நோய், புரோஸ்டேட் புற்றுநோய் ஆகிய உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்கு பின் உடல்நலம் தேறினார். இந்நிலையில், நாள்பட்ட வெள்ளை அணு மிகுதிக்கு சிகிச்சை பெற கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு நாடுகளின் தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

The post இத்தாலி முன்னாள் பிரதமர் பெர்லுஸ்கோனி மறைவு appeared first on Dinakaran.

Tags : Berlusconi ,Rome ,Silvio Berlusconi ,Dinakaran ,
× RELATED உடல் நலம் தேறினார் போப் பிரான்சிஸ் தலைமையில் ஈஸ்டர் ஞாயிறு