×

பெங்களூருவில் ஒவ்வொரு வார்டிலும் இந்திரா கேன்டீன்: முதல்வர் சித்தராமையா தகவல்

பெங்களூரு: பெங்களூரு நகரின் ஒவ்வொரு வார்டிலும் குறைந்தது 250 இந்திரா கேன்டீன்கள் தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். கர்நாடகாவில் கடந்த காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட இந்திரா கேன்டீன் சீரமைப்பது குறித்து பெங்களூருவில் நேற்று அதிகாரிகளுடன் முதல்வர் சித்தராமையா ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து அரசு அலுவலக இல்லமான கிருஷ்ணாவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘இந்திரா கேன்டீன்களை மீண்டும் திறப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுவரை இந்திரா கேன்டீன் செலவில் 70% மாநகராட்சியும், 30% மாநில அரசும் ஏற்றுக்கொண்டது.

ஆனால் இப்போது மாநகராட்சி சார்பில் 50 சதவீதமும் அரசு சார்பில் 50 சதவீதமும் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு தவிர மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், இந்திரா கேன்டீன் செலவில் 70% அரசு சார்பில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் புதிதாக இந்திரா கேன்டீன் தொடங்கப்பட வேண்டிய இடங்களின் பட்டியலை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திரா கேன்டீனில் கிடைக்கும் உணவின் தரம், அளவு மற்றும் தூய்மையை பராமரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கட்டண உயர்வு இல்லை. இந்த கேன்டீனில் ரூ.5க்கு காலை உணவும், ரூ.10க்கு மதியம், இரவு உணவும் வழங்கப்படும்’ என்றார்.

The post பெங்களூருவில் ஒவ்வொரு வார்டிலும் இந்திரா கேன்டீன்: முதல்வர் சித்தராமையா தகவல் appeared first on Dinakaran.

Tags : Indira Canteen ,Bangalore ,Sitaramaiah ,Bengaluru ,Indira ,CM ,Sidaramaiah ,Siddaramaiah ,
× RELATED பெங்களூரு விமான நிலையத்தில்...