×

டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச் மீண்டும் நம்பர் 1; முதலிடத்தில் நீடிக்கிறார் ஸ்வியாடெக்

லண்டன்: பிரெஞ்ச் ஓபன் பட்டம் வென்றதன் மூலம் செர்பிய நட்சத்திரம் நோவக் ஜோகோவிச் மீண்டும் நம்பர் 1 அந்தஸ்தை வசப்படுத்தி உள்ளார். மகளிர் பிரிவில் பட்டம் வென்ற இகா ஸ்வியாடெக் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளார். பிரெஞ்ச் ஓபன் கிராண்ட் ஸ்லாம் தொடர் நேற்று முன்தினம் முடிவடைந்த நிலையில், நேற்று வெளியான ஏடிபி மற்றும் டபுள்யூடிஏ தரவரிசை பட்டியலில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வரும் ஜோகோவிச், அதன் காரணமாக பல போட்டிகளில் பங்கேற்க முடியவில்லை.

அதனால் கடந்த 2 ஆண்டுகளாக அவர் தரவரிசையில் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறார். சில தொடர்களில் பட்டம் வென்றதால் கிடைத்த நம்பர் 1 இடமும், இத்தாலி ஓபனில் காலிறுதியுடன் வெளியேறிதால் கை நழுவியது. இந்நிலையில், பிரெஞ்ச் ஓபனின் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் ஜோகோவிச் 1640 தரவரிசைப் புள்ளிகளை பெற்றார். அதனால் 3வது இடத்தில் இருந்த அவர் 7595 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்துக்கு முன்னேறி உள்ளார்.

அரையிறுதியில் ஜோகோவிச்சிடம் தோற்ற ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ் 2வது இடத்துக்கு தள்ளப்பட்டார். முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்த ரஷ்ய வீரர் மெத்வதேவ் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு பின்தங்கினார். பைனல் வரை முன்னேறிய நார்வே வீரர் கேஸ்பர் ரூட் 4960 புள்ளிகளுடன் 4வது இடத்திலும், கிரீஸ் வீரர் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸ் 4920 புள்ளிகளுடன் 5 இடத்திலும் தொடர்கின்றனர். டபுள்யூடிஏ வீராங்கனைளுக்கான தரவரிசையில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் இகா ஸ்வியாடெக் (போலந்து, 8940 புள்ளி) முதல் இடத்திலும், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா (8012) 2வது இடத்திலும் நீடிக்கின்றனர்.

The post டென்னிஸ் தரவரிசை: ஜோகோவிச் மீண்டும் நம்பர் 1; முதலிடத்தில் நீடிக்கிறார் ஸ்வியாடெக் appeared first on Dinakaran.

Tags : Djokovic ,Sviatek ,London ,Novak Djokovic ,French Open… ,Dinakaran ,
× RELATED இந்தியருக்கு 16 ஆண்டு சிறை