×

மூணாறு அருகே மாட்டுப்பெட்டி அணையில் கம்பீரமாக உலா வரும் காட்டுயானைகள்

* பசும்புல்வெளிகளில் பார்க்க… பார்க்க… அழகு
* ஆர்வத்துடன் கண்டுகளிக்கும் சுற்றுலாப் பயணிகள்

மூணாறு: மூணாறு அருகே, மாட்டுப்பெட்டி அணைக்கட்டு பகுதியில் காட்டுயானை கூட்டம் ஹயாக உலா வருவதை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் மூணாறில் இருந்து 13 கி.மீ. தொலைவில் மாட்டுப்பெட்டி அணை அமைந்துள்ளது. இப்பகுதி சிறந்த சுற்றுலா தலமாக விளங்குகிறது. இங்கு தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவர்கள், பசுமை நிறைந்த புல் மேடுகளில் சுற்றித்திரியும் காட்டு யானை கூட்டங்களை ஆர்வமுடன் கண்டுகளித்து செல்கின்றனர்.

இந்த மாட்டுப்பெட்டி அணையை சுற்றிபார்க்க தினமும் உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமனோர் கார், பஸ், வேனில் வந்து செல்கின்றனர். இதனால், இப்பகுதி எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். இந்தநிலையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் மாட்டுப்பெட்டு அணைக்கட்டு பகுதிக்கு வந்தனர். இவர்கள் அணைக்கட்டின் நீர்த்தேக்கம் அருகே உள்ள புல்மேடுகளில் உலா வந்த காட்டுயானை கூட்டங்களை ஆர்வமுடன் கண்டுகளித்தனர். பின்னர் சாலையோர புல்வெளிகளில் மேய்ந்து கொண்டிருந்த காட்டு யானைகள் அருகே செல்லாமல் தூரத்தில் இருந்தவாறே செல்வி எடுத்து மகிழ்ந்தனர்.

The post மூணாறு அருகே மாட்டுப்பெட்டி அணையில் கம்பீரமாக உலா வரும் காட்டுயானைகள் appeared first on Dinakaran.

Tags : Thurai ,Thiru ,Dinakaran ,
× RELATED வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாத சுவாமி...